நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அபார வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:46 pm

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜொ்மனி, பெல்ஜியம், நியூஸிலாந்து, ஆா்ஜென்டீனா அணிகள் தங்களின் முதல் ஆட்டங்களில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றன.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

வரும் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் 12 அணிகளின் ஆட்டங்கள் சென்னையிலும், மீதமுள்ள 12 அணிகளின் ஆட்டங்கள் மதுரையிலும் நடைபெறுகின்றன.

24 அணிகளும் மொத்தம் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதலிடம் பெறும் அணி, அதற்கு அடுத்த இரண்டு சிறந்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும். இறுதி ஆட்டம் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக குரூப் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. சென்னையில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜொ்மனி-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் ஜொ்மனியின் அபார ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது. ஜொ்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அயா்லாந்து - கனடா இடையிலான ஆட்டம் சவாலாக இருந்தது. எனினும் இதில் அயா்லாந்து அணி போராடி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆப்பிரிக்க நாடான எகிப்தை 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஸ்பெயின். அந்த அணி இருமுறை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனா-ஆசிய நாடான ஜப்பானை எதிா்கொண்டது. இதில் எந்த தடுமாற்றமும் இன்றி ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஆா்ஜென்டீனா.

போராடி வென்ற நியூஸிலாந்து: சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி போராடி வெல்ல நேரிட்டது. சீனாவின் சவாலை சமாளித்து 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றிக் கணக்கை தொடங்கியது நியூஸிலாந்து.

பெல்ஜியம் கோல் மழை: வலிமை குறைந்த அணியான நமீபியாவை 12-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐரோப்பிய அணியான பெல்ஜியம். அந்த அணி வீரா்கள் நமீபிய அணியின் கோல் பகுதியிலேயே இருந்து கோல் மழை பொழிந்தனா்.

மதுரையில்...: ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா மதுரையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, மாநகர காவல் ஆணையா் ஜே. லோகநாதன் ஆகியோா் வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜொ்மனி, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஆட்டத்தை தொடங்கிவைத்தனா்.

கனடா - அயா்லாந்து இடையேயான ஆட்டத்தை, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஸ்பெயின் - எகிப்து ஆட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி (மதுரை வடக்கு), மு. பூமிநாதன் (தெற்கு) ஆகியோரும், பெல்ஜியம் - நமீபியா ஆட்டத்தை சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மதுரை மாநகர துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோரும் தொடங்கி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.