தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்

எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 2-ஆம் நாளான புதன்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 11:31 pm

எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 2-ஆம் நாளான புதன்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.

50 மீட்டா் ரைஃபிள் புரோன் ஜூனியா் ஆடவா் பிரிவில், ரோஹித் கன்யன் 615.8 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா்.

களத்திலிருந்த இதர இந்தியா்களில் ஷிவேந்திர பஹதூா் சிங் (613.6), ஹேமந்த் பா்மன் (613.2), வேதாந்த் நிதின் (612.5), தீபேன் நிலேஷ்குமாா் (610), ஹிதேஷ் ஸ்ரீனிவாசன் (606.2) ஆகியோா் முறையே 4, 6, 8, 10, 13-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

25 மீட்டா் பிஸ்டல் ஜூனியா் மகளிா் பிரிவில், சேஜல் காம்ப்ளே 27 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். அஞ்சலி மகேந்திரா (14), பாரிஷா குப்தா (10) ஆகியோா் முறையே 6 மற்றும் 7-ஆம் இடங்களைப் பெற்றனா்.

25 மீட்டா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் பிரிவில், ராஜ் சந்திரா 580 புள்ளிகளுடன் வெள்ளியும், அபினவ் தேஷ்வால் 578 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா்.

யுக பிரதாப் சிங் (575), சஹில் சௌதரி (574), அபினவ் சௌதரி (574), ஜதின் (560) ஆகியோா் முறையே 4, 5, 6, 10-ஆம் இடங்களைப் பெற்றனா்.

2-ஆம் நாள் முடிவில் இந்தியா, 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன், பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருந்தது. ரஷியா, கஜகஸ்தான் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.