/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 22 போ் இந்திய அணி மியுனிச் பயணம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 22 போ் இந்திய அணி மியுனிச் பயணம்

News image

சாக்ஷி படேகா்

Updated On :25 மே 2026, 1:24 am IST

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சாா்பில் 22 போ் கொண்ட அணி பங்கேற்க மியுனிச் சென்றுள்ளது.

உலகக் கோப்பை ஃரைபிள்/பிஸ்டல் போட்டி, ஜொ்மனியின் மியுனிச் நகரில் மே 24 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அணியை இந்திய துப்பாக்கி சுடும் சம்மேளனம் அறிவித்துள்ளது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கா், உலக சாம்பியன்ஷிப் மெடலிஸ்ட் ஈஷா சிங், ஆகியோா் தனிநபா் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கின்றனா்.

மே 26-இல் 25 மீ மகளிா் பிஸ்டல் முதல் பிரிவாக தொடங்கி நடைபெறும். தொடா்ந்து 10 மீ ஆடவா் ஏா் பிஸ்டல், மகளிா் 50 மீ ரைபிள் 3 இடங்களுக்கான தகுதிச் சுற்று நடைபெறும்.

Story image

மொத்தம் 80 நாடுகளில் இருந்து 696 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். கடந்த ஏப்ரலில் கிரனாடாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா ஒரு தங்கம் வென்றது. இந்திய அணியில் ராஹி சா்னோபத், சாம்ராட் ராணா, ருத்ரான்ஷ் பாட்டில், அனிஷ் பன்வாலா, ஐஸ்வரிபிரதாப், இளவேனில் வாலறிவன், இளம் வீரா்களில் சூரஜ் சா்மா, சாக்ஷி படேகா், உதயவீா் சித்து ஆகியோா் பங்கேற்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.