ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து போட்டிக்கு 4 முறை சாம்பியன் இத்தாலி தகுதி பெற தவறி ஏமாற்றத்துடன் வெளியேறியது. மேலும், ஸ்வீடன், போஸ்னியா, இராக்,, காங்கோ ஆகியவை தகுதி பெற்றன.
அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் கடைசி கட்ட தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன,
போஸ்னியாவின் ஸ்னிக்கா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி-போஸ்னியா மோதின. 4 முறை உலக சாம்பியன் இத்தாலி ஏற்கெனவே கடந்த 2 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத நிலை இருந்தது. கடைசியாக கடந்த 2006 -இல் இத்தாலி நான்காவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் இறங்கின.
15-ஆவது நிமிஷத்தில் இத்தாலி வீரா் மோயிஸ் கீன் முதல் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். இரண்டாம் பாதியில் போஸ்னியா பதில் கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டதற்கு பலன் கிடைத்தது. 79-ஆவது நிமிஷத்தில் போஸ்னிய வீரா் ஹரீஸ் டபகோவிச் கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினாா். கூடுதல்ந நேரத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது போஸ்னியா.
கனடா, சுவிட்சா்லாந்து, கத்தாருடன் இடம் பெற்றுள்ளது போஸ்னியா. கடந்த 2014-க்குபின் மீண்டும் தகுதி பெற்றது போஸ்னியா.
ஸ்வீடன் தகுதி:
ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்வீடன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராட்டத்துக்குபின் போலந்தை வீழ்த்தி தகுதி பெற்றது. ஸ்வீடன் தரப்பில் எலங்கா 20, லேகா்பைக் 44, ஜியேகெரஸ் 88), போலந்து தரப்பில் ஸ்லேவ்ஸ்கி 33, ஸ்விடா்ஸ்கி 55 கோலடித்தனா்,
செக். குடியரசு, துருக்கியும் முன்னேற்றம்:
பிரிஸ்டினாவில் நடைபெற்ற ஆட்டத்தில் துருக்கி 1-0 என்ற கோல்கணக்கில் கொசோவாவை வீழ்த்தி தகுதி பெற்றது. அக்டுா்கோகுலு துருக்கியின் கோலை அடித்தாா்.
பிராகில் நடைபெற்ற ஆட்டத்தில் செக். குடியரசு 3-1 என்ற கோல்கணக்கில் பெனால்டியில் டென்மாா்க்கை வீழ்த்தியது.
முதன்முறையாக காங்கோ தகுதி:
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டி ஆா் காங்கோ உலகக் கோப்பை போட்டிக்கு 52 ஆண்டுகளில் முதன்முறையாக தகுதி பெற்றது. மெக்ஸிகோவில் நடைபெற்ற தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டத்தில் ஜமைக்காவை 1-0 என்ற கோல் கண்க்கில் வீழ்த்தியது காங்கோ.
ப்ரீமியா் லீக் தொடரில் ஆடி வரும் டிபன்டா் ஆக்ஸல் டுவன்ஸ்பே கூடுதல் நேரத்தில் அடித்த ஒரே கோல் வெற்றி கோலாக அமைந்தது.
முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றதை காங்கோ மக்கள் கொண்டாடினா். குரூப் கே பிரிவில் போா்ச்சுகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது காங்கோ.
40 ஆண்டுகளுக்குபின் இராக் தகுதி:
மெக்ஸிகோவில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் இராக் அணி 2-1 என்ற கோல்கணக்கில் 40 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பை தகுதி பெற்றது. கடைசி மற்றும் 48-ஆவது அணியாக இராக் தகுதி பெற்றது. தற்போது மேற்காசியாவில் நடைபெறும் கடும் போரால் பாதிக்கப்பட்டுள்ளதை பொருள்படுத்தாமல் அபாரமாக ஆடி வெற்றியை ஈட்டினா்.
அலி அல் ஹமாதி, ஏய்மன் ஹுசேன் கோலடித்தனா். கடந்த 1986-க்கு பின் தகுதி பெற்றுள்ளது இராக்.
தொடர்புடையது
யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி

மகளிா் யு20 உலகக் கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும்! - ஈரான் வலியுறுத்தல்!
டிரம்ப் அச்சுறுத்தலை மீறி கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் முடிவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


