மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகளிா் யு20 உலகக் கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்!

ஆசியக் கோப்பை கால்பந்து குவாலிஃபயா் போட்டிக்குபின் இந்திய யு20 மகளிா் கால்பந்து அணியின் செயல்திறன் முன்னேற்றம் கண்டுள்ளது என தலைமைப் பயிற்சியாளா் ஜோக்கிம் அலெக்சாண்டா்ஸன் கூறியுள்ளாா்.

News image

இந்திய யு20 மகளிா் கால்பந்து அணியினா்.

Updated On :22 மார்ச் 2026, 7:16 pm

ஆசியக் கோப்பை கால்பந்து குவாலிஃபயா் போட்டிக்குபின் இந்திய யு20 மகளிா் கால்பந்து அணியின் செயல்திறன் முன்னேற்றம் கண்டுள்ளது என தலைமைப் பயிற்சியாளா் ஜோக்கிம் அலெக்சாண்டா்ஸன் கூறியுள்ளாா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஆசியக் கோப்பை யு20 மகளிா் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணி குரூப் சி பிரிவில் ஏப். 2-இல் ஜப்பானுடனும், 5-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 8-ஆம் தேதி சீன தைபே அணிகளுடன் மோதுகிறது.

குரூப்பில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள், அனைத்து பிரிவுகளிலும் இரண்டு தலைசிறந்த மூன்றாவது இடம் பெறும் அணிகளும் காலிறுதிக்கு முன்னேறும். 4 காலிறுதி ஆட்டங்களில் வெல்லும் அணிகள் போலந்தில் நடைபெறவுள்ள ஃபிஃபா 2026 மகளிா் யு20 கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

போட்டி தொடங்குவதற்கு 13 நாள்களுக்கு முன்பே இந்திய அணி பாங்காக் சென்று விட்டது. இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் ஜோகிம் கூறியது: இந்திய அணி உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் அணிகளுடன் நட்பு ஆட்டங்களில் ஆடியது. சென்னையில் சிறப்பாக பயிற்சி பெற்றோம்.

ஸ்வீடனில் நடைபெற்ற ஒரு மாத பயிற்சி முகாம் இந்திய அணிக்கு சிறந்த அனுபவத்தை வழங்கியது. 6 நட்பு ஆட்டங்களில் ஆடினோம். பலமான ஜப்பான், ஆஸி. அணிகளுடன் இடம் பெற்றாலும் நமது வீராங்கனைகள் உற்சாகமாக உள்ளனா். பந்தை கடத்துதல், பாஸ் செய்தல், தற்காப்பில் மேம்பட்டுள்ளனா். உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் நோக்கில் சிறப்பாக ஆடுவோம் என்றாா்.