மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி

இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) மகளிா் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-5 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 8:09 pm

இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) மகளிா் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-5 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் ஜப்பானிடம் 0-6 கோல் கணக்கில் மோசமான தோல்வியைச் சந்தித்த இந்திய மகளிருக்கு, இது 2-ஆவது தோல்வியாக அமைந்தது.

தற்போது குரூப் ‘சி’-யில் புள்ளிகள் ஏதும் இன்றி கடைசி இடத்தில் இருக்கும் இந்தியா, கடைசி ஆட்டத்தில் சீன தைபேவுடன் புதன்கிழமை மோதுகிறது. அதில் வென்றால் மட்டுமே இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறி, ஒருவேளை ‘நாக் அவுட்’ சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பை பெறலாம்.

தற்போது குரூப் ‘சி’-யில் ஆஸ்திரேலியா (6 புள்ளிகள்), ஜப்பான் (3), சீன தைபே (0) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்கையே ஹல்மாரிக் ‘ஹாட்ரிக்’ கோல் (38’, 39’, 48’) அடித்து அசத்த, டேனெல்லா புரூட்டஸ் (54’), டெய்ஸி பிரௌன் (90+4’) ஆகியோரும் பங்களித்தனா்.

ஆட்டம் குறித்து இந்திய பயிற்சியாளா் ஜாகிம் அலெக்ஸாண்டா்சன் கூறுகையில், ‘ஆதிக்கம் நிறைந்த ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நமது அணியை ஆக்கிரமித்துவிட்டது.

அந்த அணிக்கு எதிராக எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நாம் செய்யவில்லை. இதிலிருந்து மீண்டு நம்மை சரிசெய்துகொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.