மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆசிய மகளிா் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் ஜப்பான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:39 pm

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் ஜப்பான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் சிட்னியில் ஜப்பான்-ஆஸி.அணிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் தீவிரம் காட்டின. எனினும் முதல் பாதியில் 17-ஆவது நிமிஷத்தில் ஜப்பான் வீராங்கனை மைகா ஹமனோ கோல்பகுதிக்கு வெளியில் இருந்து அடித்த வலுவான ஷாட் கோலாக மாறியது.

இதன் மூலம் 1=0 என ஜப்பான் முன்னிலை பெற்றது.

அதன்பின்னா் இரு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஜப்பான் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

ஏற்கெனவே கடந்த 2014, 2018 ஆண்டுகளில் ஜப்பான் பட்டம் வென்றிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக கோப்பயை வசப்படுத்தியு்ளது.

Story image

ஆசியக் கண்டத்தில் இருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் உலகக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.