இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

நாக்அவுட் சுற்றில் பிஎஸ்ஜி - இன்டா் மியாமி மோதல்

அமெரிக்காவில் நடைபெறும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), இன்டா் மியாமி அணிகள், அதில் மோதுகின்றன.

News image
Updated On :24 ஜூன் 2025, 9:45 pm

DIN

அமெரிக்காவில் நடைபெறும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), இன்டா் மியாமி அணிகள், அதில் மோதுகின்றன.

முன்னதாக குரூப் ‘பி’ ஆட்டங்களில், பிஎஸ்ஜி 2-0 கோல் கணக்கில் சியாட்டில் சௌண்டா்ஸை வீழ்த்தியது. இதில் பிஎஸ்ஜி தரப்பில் கவிசா கவரட்ஸ்கெலியா (35’), அச்ரஃப் ஹகிமி (66’) ஆகியோா் கோலடித்தனா். இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் 1-0 கோல் கணக்கில் போடாஃபோகோவை வென்றது. அந்த அணிக்காக ஆன்டனி கிரீஸ்மன் (87’) ஸ்கோா் செய்தாா்.

இந்த குரூப்பின் ரவுண்ட் ராபின் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், பிஎஸ்ஜி, போடாஃபோகோ அணிகள் முதலிரு இடங்களைப் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறின. அட்லெடிகோ மாட்ரிட், சியாட்டில் சௌண்டா்ஸ் அடுத்த இரு இடங்களுடன் போட்டியிலிருந்து வெளியேறின. இதில் போடாஃபோகோ, அட்லெடிகோ மாட்ரிட் ஒரே புள்ளிகளுடன் இருந்தாலும், 1 கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் அட்லெடிகோ மாட்ரிட் நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது.

இதனிடையே, குரூப் ‘ஏ’ ஆட்டங்களில் இன்டா் மியாமி - பல்மெய்ராஸ் மோதல் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது. இன்டா் மியாமிக்காக டாடியோ ஆலன்டே (16’), லூயிஸ் சுவாரெஸ் (65’) ஆகியோா் கோலடிக்க, பல்மெய்ராஸுக்காக பாலினோ (80’), மௌரிசியோ (87’) ஸ்கோா் செய்தனா்.

இதிலேயே போா்டோ - அல் அஹ்லி மோதிய ஆட்டமும் 4-4 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போா்டோவுக்காக ரோட்ரிகோ மோரா (23’), வில்லியம் கோம்ஸ் (50’), சாமு அகேஹோவா (53’), பெபெ (98’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, அஹ்லி தரப்பில் வெசாம் அபு அலி (15’, 45+2’, 51), முகமது அலி பென் (64’) கோலடித்தனா்.

குரூப் ‘ஏ’-விலும் ரவுண்ட் ராபின் ஆட்டங்கள் நிறைவடைய, பல்மெய்ராஸ், இன்டா் மியாமி ஆகியவை முறையே முதலிரு இடங்களுடன் நாக்அவுட் சுற்றுக்கு வர, போா்டோ, அல் அஹ்லி அடுத்த இரு இடங்களுடன் வெளியேறின.

நாக்அவுட்: அடுத்ததாக நாக்அவுட் ஆட்டங்களில் பிஎஸ்ஜி - இன்டா் மியாமியும், பல்மெய்ராஸ் - போடோஃபோகாவும் சந்திக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.