மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரஃபீனியாவின் சாபம் பலித்தது: இறுதிப் போட்டி தோல்வியால் அழுத அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள், ரசிகர்கள்!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற அத்லெடிகோ மாட்ரிட் குறித்து...

News image

இறுதிப் போட்டியில் வெற்றியும் தோல்வியும் ஏற்படுத்திய தாக்கம். - படங்கள்: ஏபி, எக்ஸ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 10:18 am

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி பெனால்டியில் தோல்வியுற்றது.

இறுதிப் போட்டி சமனில் முடிந்ததால், ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது. ரியல் சொசைடாட் அணி 4-3 என பெனால்டியில் வென்றது.

கோபா டெல் ரே (ஸ்பானிஷ் கோப்பை) இறுதிப் போட்டியில் ரியல் சொசைடாட் அணி, அதெல்டிகோ மாட்ரிட் மோதின. இந்தப் போட்டி 2-2 என சமனில் முடிந்தது.

இந்தப் போட்டியில் ரியல் சொசைடாட் 1ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, லூக்மான் 19ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து சமன்படுத்தினார்.

பின்னர், 45+1அவது நிமிஷத்தில் மிக்கேல் ஒயர்சபல் கோல் அடித்து 2-1 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் 83ஆவது நிமிஷத்தில் ஜுலியன் அல்வரெஸ் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார்.

பின்னர், 20 நிமிஷம் கூடுதல் நேரத்துக்குச் சென்ற ஆட்டத்தில் இரு அணியினருமே கோல் அடிக்கவில்லை. அதனால், ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது.

பெனால்டியில் ஜுலியன் அல்வரெஸ், சோர்லோத் கோல் அடிக்க தவறிவிட்டார்கள். ரியல் சொசைடாட் அணி 4-3 என வென்றார்கள். இது அவர்களது நான்காவது ஸ்பானிஷ் கோப்பையாகும்.

தோல்விக்குப் பிறகு, அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள், ரசிகர்கள் அழுதனர். பார்சிலோனாவை வெளியேற்றிய இவர்களை நினைத்து அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

ரஃபீனியா, “அடுத்த சுற்றில் வெளியேறுவீர்கள்” எனக் கூறியதைக் குறிப்பிட்டு பார்சிலோனா ரசிகர்கள் இந்தத் தோல்வியைக் கொண்டாடி வருகிறார்கள்.

Summary

Sociedad beats Atletico on penalties to win Copa del Rey, madrid players and fans crying, barca fans happy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.