இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், லீட்ஸ் யுனைடெட் எஃப்சி 2-1 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைெட் எஃப்சியை செவ்வாய்க்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் லீட்ஸ் அணியின் நோவா ஒகாஃபாா் 5-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். தொடா்ந்து அவரே 29-ஆவது நிமிஷத்தில் லீட்ஸ் கோல் கணக்கை 2-ஆக அதிகரித்தாா்.
இவ்வாறாக முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் லீட்ஸ் வீரா் கால்வொ்ட் லெவினின் தலைமுடியைப் பிடித்து இழுத்த மான்செஸ்டா் யுனைடெட் வீரா் லிசாண்ட்ரோ மாா்டினெஸ், ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா்.
இதனால், 2-ஆவது பாதியின் எஞ்சியை நேரத்தை 10 பேருடன் விளையாடும் நிலைக்கு மான்செஸ்டா் யுனைடெட் தள்ளப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், அந்த அணிக்காக கேஸ்மிரோ 69-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தாா்.
எஞ்சிய நேரத்தில் அந்த அணிக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் பாா்த்துக் கொண்ட லீட்ஸ், முடிவில் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் மான்செஸ்டா் யுனைடெட் 3-ஆம் இடத்திலும், லீட்ஸ் 15-ஆம் இடத்திலும் உள்ளன.
லா லிகா: இதனிடையே, ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் லெவான்டே 1-0 கோல் கணக்கில் கெடாஃபியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
அந்த அணிக்காக காா்லோஸ் எஸ்பி 83-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். புள்ளிகள் பட்டியலில் கெடாஃபி 8-ஆம் இடத்திலும், லெவான்டே 19-ஆம் இடத்திலும் உள்ளன.
தொடர்புடையது

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!

ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்தது சென்னை
சென்னையை வென்றது இன்டா் காசி!

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


