ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிஎஸ்ஜியுடன் மோதும் இன்டர் மியாமி!

கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது குறித்து...

News image

இன்டர் மியாமி அணியினர். - படம்: ஏபி

Updated On :24 ஜூன் 2025, 10:21 am

கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிஎஸ்ஜி அணியுடன் மோதவிருக்கிறது.

கிளப் உலகக் கோப்பையின் லீக் போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும் பல்மேய்ரஸ் அணியும் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மோதின.

இந்தப் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. 54 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைதிருந்த இன்டர் மியாமி 79 நிமிஷங்கள் வரை 2-0 என முன்னிலை வகித்தது.

கடைசி நேரத்தில் ஃபார்முக்கு திரும்பிய பல்மேய்ரஸ் அணி 80, 87 ஆவதி நிமிஷங்களில் கோல் அடித்து போட்டியை சமன்செய்தது.

இதன் மூலம் இரு அணிகளும் 5 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது.

இன்டர் மியாமி அணி சாம்பியன் லீக்கில் வென்ற பிஎஸ்ஜி அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் வென்றிருந்தால் இன்டர் மியாமி அணிக்கு எளிதாக இருந்திருக்கும்.

22 ஷாட்டுகளை அடித்த பல்மேய்ரஸ் அணி இலக்கை நோக்கி பந்தினை 7 முறை அடித்தது. இதேவேளையில் இன்டர் மியாமி அணி தான் அடித்த 8 ஷாட்டுகளில் 3 முறை மட்டுமே இலகை நோக்கி அடித்தது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி கோல் அடிக்கவில்லை. லீயிஸ் சௌரஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஜன.29ஆம் தேதி மோதவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.