நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த ஜோ ரூட்!

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் மாறியுள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:18 pm

DIN

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் மாறியுள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் மலன் 140 ரன்கள் எடுத்தார். அவரைத்  தொடர்ந்து ஜோ ரூட் 82 ரன்கள் குவித்தார். 

இன்றயைப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய  சாதனை ஒன்றை படைத்தார். ஜோ ரூட் 63 ரன்கள் எடுத்திருக்கையில் இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

இதற்கு முன்னதாக, இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 897 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்காக உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.