கோடைகாலம் வந்துவிட்டாலே ஜெர்மனியர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவரையிலும் தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டவர்கள் இப்போது தான் அந்த உடைகளிலிருந்து தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.

இந்த 3 மாதங்களைத் தவறவிட்டால், அப்புறம் விட்டமின் டி-க்காக அடுத்தவருடம் வரை காத்திருக்க வேண்டும். அதனால் இந்த கோடை காலத்தில் பல விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அதில் ஒன்று தான் சகதியில் சேற்றிலும் உருண்டு புரளும் விளையாட்டு.

ஜெர்மனியிலுள்ள ஆர்ன்பெர்க் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டில் சுமார் 15,000 பேர் கலந்து கொண்டனர்.

போட்டியாளர்கள் சேறு, சகதி மற்றும் அழுக்கு நீர் என்று 20-க்கும் மேற்பட்ட தடைகளை கடந்து செல்லும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.

உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இந்த போட்டிக்கு இருப்பதால் இதுபோன்று இன்னும் 2 போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற உள்ளன.

ஆக மொத்தத்தில் இந்த கோடை காலம் ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


