மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆஸி. ஓபன்: 5 முறை சாம்பியன் வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் வெளியேற்றப்பட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:03 pm

Raghavendran

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முன்னணி வீரர்களான ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்கள்.

இந்நிலையில் மற்றொரு முன்னணி வீரரும் 5 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ஆவது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவின் சங் ஹியோனை திங்கள்கிழமை எதிர்கொண்டார்.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங் ஹியோன், 6-7 (4-7), 5-7, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் 12 கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்றுள்ள நோவக் ஜோகோவிச், 6-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.