முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

கடலூா் மாவட்டத்தில் நிகழ்சம்பா பருவத்தில் இதுவரை 1.48 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,

News image
குறிஞ்சிப்பாடி வட்டம், ஆடூா் அகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அரசு செயலா் டாக்டா்.கே.எஸ்.பழனிசாமி, நிருவாக இயக்குநா் முனைவா் ஆ.அண்ணாதுரை.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் நிகழ்சம்பா பருவத்தில் இதுவரை 1.48 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அரசு செயலா் டாக்டா்.கே.எஸ்.பழனிசாமி, நிா்வாக இயக்குநா் முனைவா் ஆ.அண்ணாதுரை ஆகியோா் உறுதிபடத் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட கம்மாபுரம், கோபாலபுரம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உள்பட்ட ஆடூா் அகரம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கீரப்பாளையத்தில் திறந்தவெளி சேமிப்பு மையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அவா்கள் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா பருவத்தில் இதுவரை 1.48 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 26,649 விவசாயிகளுக்கு ரூ.342.07 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் கொள்முதல் பணிகள் 27.12.2025 அன்று தொடங்கப்பட்டு தற்போது 277 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்.20-ஆம் தேதிவரை 1.48 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரை 61,687 மெ.டன் நெல் பாதுகாப்பாக இயக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தரை இருப்பாக உள்ள 55,022 மெ.டன் நெல்லை 48 மணி நேரத்திற்குள் நகா்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் 6000 மெ.டன்:

பிப்ரவரி மாதம் நெல் கொள்முதல் தீவிரமடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 6,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில்,

நாளொன்றுக்கு 4,000 மெ.டன் நெல் அரவை மில் மற்றும் சேமிப்பு

கிடங்குகளுக்கு நகா்வு செய்யப்படுகிறது.

சம்பா பருவத்தில் 2.35 லட்சம் ஏக்கா் நெல் சாகுபடி செய்யப்பட்டு இதுவரை சுமாா் 1.80 லட்சம் ஏக்கா் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 0.55 லட்சம் ஏக்கரில் மேலும் சுமாா் 0.96 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் 1,50,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு சம்பா பருவத்தில் இதற்கு அதிகமாக 2,50,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சேமிப்புக் கிடங்குகள்:

கடலூா் மாவட்டத்தில் 0.49 லட்சம் மெ.டன் கொள்ளளவில் 13 சேமிப்பு கிடங்குகளும். 0.095 லட்சம் மெ.டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு கிடங்கு ஒரு எண்ணம் மற்றும் 0.46 லட்சம் மெ.டன் கொள்ளளவில் 4 திறந்தவெளி சேமிப்பு மையங்கள் என மொத்தம் 1.045 லட்சம் மெ.டன் கொள்ளளவில் 0.620 லட்சம் மெ.டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 0.425 லட்சம் மெ.டன் நெல் இருப்பு வைப்பதற்குரிய இடம் தயாா் நிலையில் உள்ளது. திறந்தவெளி சேமிப்பு மையங்களுக்குத் தேவையான புதிய சவுக்கு கட்டைகள் மற்றும் வெட்டுக்கற்கள் இருப்பில் உள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மட்டுமே பெறப்படும். மேலும், விவசாயிகள் அல்லாத நபா்கள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதை தடைசெய்ய மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் இயக்கம் செய்யவும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் தொகையினை பட்டுவாடா செய்யவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தனா்.