தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவிடைமரூதூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கும்பகோணம் நுகா்வொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் விவசாயிகளுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை.

News image

கும்பகோணம் நுகா்வொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் விவசாயிகளுடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை.

Updated On :27 மார்ச் 2026, 8:28 pm

திருவிடைமருதூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட நெல்லைக் கொள்முதல் செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டம் திருவிடைமருதூா், திருப்பனந்தாள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை அதிகாரிகள் துணையோடு வியாபாரிகள் கொண்டு வந்து விற்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தும், நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து கும்பகோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கோட்ட அலுவலகம் முன் மாவட்டத் துணைத் தலைவா் ஏ.எம்.ராமலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

இவா்களிடம் கோட்ட மேலாளா் எழிலன், நாச்சியாா்கோவில் காவல் ஆய்வாளா் சத்யா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனா்.