தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புரோ கபடி: சொந்த மண்ணில் 6 ஆட்டங்களிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி: ரசிகர்கள் ஏமாற்றம்

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 110-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-45 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

News image
Updated On :5 அக்டோபர் 2017, 7:31 pm

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 110-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-45 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.
இதன் மூலம் சென்னையில் நடைபெற்ற 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட தமிழ் தலைவாஸ் வெற்றி பெற முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 10 நிமிடங்கள் வரை இரு அணிகளும் சிறப்பாக ஆடிய நிலையில், அஜய் தாகுர் ஆட்டமிழக்க பெங்களூரின் கை ஓங்கியது. ஆல் அவுட் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, தர்ஷன், விஜின் ஆகியோரின் சூப்பர் டேக்கிள் மூலம் அதிலிருந்து தப்பியது.
எனினும், 19-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆக, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 19-10 என்ற கணக்கில் பெங்களூரு முன்னிலை பெற்றது.
2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ரோஹித் குமார் தனது 10-ஆவது புள்ளியை கைப்பற்றி, சூப்பர் 10 அந்தஸ்தை பெற்றார். மறுமுனையில் பெங்களூரை சமாளிக்க முடியாமல் திணறிய தமிழ் தலைவாஸ் 2-ஆவது முறையாக ஆல் அவுட் ஆகி, 10-27 என பின்தங்கியது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு 30-ஆவது நிமிடத்தில் 3-ஆவது முறையாக தமிழ் தலைவாஸை ஆல் அவுட் செய்து, 37-16 என முன்னிலை பெற்றது. பின்னர் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய், தொடர்ச்சியாக புள்ளிகளை குவித்து சூப்பர் 10 அந்தஸ்தை பெற்றார். இதனால் பெங்களூரு அணி ஆல் அவுட் ஆனது.
கடைசி கட்டத்தில் தமிழ் தலைவாஸ் கடுமையாக போராடியபோதும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இறுதியில் 45-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு வென்றது. பெங்களூரு தரப்பில் ரோஹித் குமார் 17 ரைடு புள்ளிகளை கைப்பற்றினார். தமிழ் தலைவாஸ் தரப்பில் அஜய் தாக்குர் 15 ரைடு புள்ளிகள் பெற்றார்.தற்போது 5-ஆவது வெற்றியை பெற்ற பெங்களூரு 39 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது. அந்த இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
இன்றைய ஆட்டம்
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-
குஜராத் ஃபார்ச்சூன் ஜயன்ட்ஸ்
நேரம்: இரவு 8 மணி
புணேரி பால்டான்-பெங்கால் வாரியர்ஸ்
நேரம்: இரவு 9 மணி
இடம்: ஜெய்ப்பூர்
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.