இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார்.
இதையடுத்து கும்ப்ளேவின் விலகல் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
கும்ப்ளே - கோலி இடையேயான கருத்துவேறுபாடுகள் குறித்து எனக்குக் குறைவாகவே தெரியும். ஆனால் இது இந்திய கிரிக்கெட்டின் துக்க நாள். அனில் கும்ப்ளே பயிற்சியாளர் ஆன நாளிலிருந்து இந்தியா கிட்டத்தட்ட அனைத்துப் போட்டிகளையும் வென்றுள்ளது. கடந்த ஒருவருடத்தில் கும்ப்ளே தவறு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. கருத்துவேறுபாடுகள் எல்லா அணிகளிலும் ஏற்படும். ஆனால் ஆட்ட முடிவுகளையே இறுதியில் காணவேண்டும்.
நாஜிநாமா செய்ய கும்ப்ளேவுக்குக் காரணங்கள் இருந்திருக்கும். ஆனால் அவர் பணியில் நீடிப்பார் என நினைத்தேன். ஆலோசனைக் குழு கும்ப்ளேவுக்கு ஆதரவாக உள்ளதால் அவர் பணியில் நீடித்திருக்கவேண்டும். நிச்சயம் அவர் இன்னும் பலமாக மீண்டுவருவார் என எண்ணுகிறேன். ஆனால் முதல்முறையாக போராட்டக் குணம் கொண்ட கும்ப்ளே அதை எதிர்த்து நிற்கவில்லை. ஒரு வீரராகவும் நிர்வாகியாகவும் அனில் கும்ப்ளேவிடம் உள்ள திறமைகளும் அனுபவங்களும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பயன்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி ஹாக்கி யூனிட் ஆலோசனைக் கூட்டம்

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

கறிக்கோழி பண்ணைகளுக்கு லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்

2026-27 கல்வியாண்டு முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


