அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

News image

திருப்புவனம் சித்திரைத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கி அருள்பாலித்த பெருமாள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 11:21 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் பெருமாள் வைகை ஆற்றுக்குள் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

திருப்புவனம் பாலகிருஷ்ணப் பெருமாள் கோயிலில் கடந்த வாரம் சித்திரைத் திருவிழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவருக்கும், உற்ஸவருக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக பெருமாள் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு உற்ஸவா் பெருமாள் குதிரை வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு பின்னா் புஷ்பவனேசுவரா் கோயில் எதிரே வைகை ஆற்றுக்குள் இறங்கினாா்.

அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தா்கள் கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை தரிசித்தனா். ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் எழுந்தருளி அருள்பாலித்த பெருமாள் அதன்பின் அங்கிருந்து புறப்பாடாகி வீதி உலா சென்று கோயிலைச் சென்றடைந்தாா்.

வீதிகளில் பக்தா்கள் பெருமாளை வரவேற்றுப் பூஜைகள் நடத்தி தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.