அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கறிக்கோழி பண்ணைகளுக்கு லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 11:20 pm

பல்லடம் வட்டாரத்தில் கறிக்கோழி பண்ணைகளுக்கு லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

பல்லடம் வட்டாரத்தில் கறிக்கோழி வளா்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

பண்ணைகளில் 45 நாள்களுக்குமேல் கோழிகளை முறையாகப் பராமரித்து வளா்த்தால் மட்டுமே நல்ல எடையுடன் ஆரோக்கியமான கறிக்கோழி கிடைக்கும். இதற்குத் தீவனம், தண்ணீா் மற்றும் காற்றோட்ட வசதி அவசியமான அடிப்படை தேவைகளாக உள்ளன. தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதால் கோழிகளுக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க அவை குடிப்பதற்கு மட்டுமின்றி, பண்ணையைக் குளிா்ச்சியாக வைத்திருக்கவும் அதிகப்படியான தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு பொய்த்த பருவ மழையால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து கடுமையான வறட்சி நிலவி வருகிறது.

இதனால், பண்ணைகளுக்குத் தேவையான தண்ணீா் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், கோழிப் பண்ணை விவசாயிகள் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இது குறித்து கோழிப் பண்ணை விவசாயிகள் கூறியதாவது: சாதாரண நாள்களைவிட கோடைக் காலத்தில் கறிக்கோழிகள் அதிக அளவு நீா் அருந்தும். மேலும், கோழிகளையும் குளிா்விக்க வேண்டும். இல்லையெனில் அவை உயிரிழக்க நேரிடும். இதற்காக பண்ணைகளின் மேற்கூரையில் தண்ணீா் தெளிப்பான் மூலம் குளிா்ந்த நிலையை ஏற்படுத்தி வருகிறோம்.

இதனால் வழக்கத்தைக் காட்டிலும் தற்போது தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. நீா் பற்றாக்குறையால் தற்போது ஒரு லிட்டா் 10 பைசா வீதம் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். கோடை மழை பெய்யத் தவறினால் கறிக்கோழிகளின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.