இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள் என்கிற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இந்தியா. 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை தொடங்குகிறது.
இந்திய கேப்டன் கோலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தன்னுடைய இடம் பாதுகாப்பாக உள்ளதாக கே.எல். ராகுல் உணரவேண்டும். வெளியே நடக்கும் விஷயங்களால் அது மாறக்கூடாது. அணிக்குத் தேவைப்படும்போது ராகுல் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவரைப் போன்றவருக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். நன்றாக விளையாடி வந்தாலும் காயங்களால் வெளியேற வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.
கடந்த டெஸ்டில் விளையாடிய தொடக்க வீரர்களில் ஒருவர் ராகுலுக்காகத் தன் இடத்தை விட்டுக்கொடுக்கவேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக நிறைய சாதித்துள்ளார் ராகுல். எனவே அவருடைய இடம் மீண்டும் அவருக்கு வழங்கப்படவேண்டும். எனவே நாளைய டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடுவார். அணியின் கூட்டம் முடிந்தபிறகு இதுகுறித்து தெளிவான முடிவை அறிவிக்கமுடியும்.
அதேசமயம் இன்னொரு தொடக்க வீரர் யார் என்றால், கடந்த டெஸ்ட் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி அணிக்கு உதவிய வீரருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். யாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையோ அவர் நிச்சயம் நிலைமையைப் புரிந்துகொள்வார். தொழில்முறையில் விளையாடும் வீரர்கள் அணியின் நலனுக்காக இந்தச் சூழலை நிச்சயம் புரிந்துகொள்வார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


