அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. மேலும் பிசிசிஐயில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும் பரிந்துரைகளை வழங்கியது.
பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலின்போது ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே இருக்க வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவியில் இருக்கக்கூடாது, பிசிசிஐ நிர்வாகிகள் ஒரு முறை பதவியில் இருந்துவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது, இந்திய அணியின் தேர்வுக்குழுவில் 3 பேர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பவை லோதா குழுவின் பரிந்துரைகளில் மிக முக்கியமானதாகும்.
இந்நிலையில், ராஜஸ்தான் விளையாட்டு விதிமுறைகள் தொடர்பான வழக்கு ஒன்றில், கிரிக்கெட் போல அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


