2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆஸி.க்கு 'லந்து' கொடுத்த இங்கிலாந்து: ஒரு போட்டி - பல சாதனை!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:00 pm

Raghavendran

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் 3-ஆவது போட்டி நாட்டிங்கம்-இல் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றியது.

இப்போட்டியில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:

இங்கிலாந்து இன்னிங்ஸில் மொத்தம் 41 பவுண்டரிகளும், 21 சிக்ஸர்களும் விளாசப்பட்டன.

 
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள்:

  • இயன் மோர்கன் - 5418* 
  • இயன் பெல் - 5416 
  • பால் காலிங்வுட் - 5092
  • ஆலெக்ஸ் ஸ்டூவர்ட் - 4677 
  • ஜோ ரூட் - 4552 
  • கெவின் பீட்டர்சன் - 4422

ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்த இங்கிலாந்து வீரர்கள்:

  • 46 ஜாஸ் பட்லர் v பாகிஸ்தான், 2015
  • 53 மூயின் அலி v மே.இ.தீவுகள், 2017
  • 54 ஜானி பேரிஸ்டோ v ஸ்காட்லாந்து, 2018
  • 58 ஜானி பேரிஸ்டோ v நியூஸிலாந்து, 2018
  • 61 ஜாஸ் பட்லர் v இலங்கை, 2014
  • 62 அலெக்ஸ் ஹேல்ஸ் v ஆஸ்திரேலியா, 2018*

100 சதவீதத்துக்கும் மேல் ஸ்டிரைக் ரேட்டில் அதிக சதமடித்த வீரர்கள்:

  • 25 - ஏபி டி வில்லியர்ஸ் 
  • 10 - இஜாஸ் அகமது 
  • 6 - ஷாகித் அஃப்ரிடி 
  • 6 - ஜானி பேரிஸ்டோ 
  • 5 - ஜாஸ் பட்லர்

ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் இங்கிலாந்து பெற்ற மிகப்பெரிய வெற்றிகள்: 

  • 242 v ஆஸ்திரேலியா, டிரெண்ட் பிரிட்ஜ், 2018*
  • 210 v நியூஸிலாந்து, எட்பாஸ்டன், 2015
  • 202 v இந்தியா, லார்ட்ஸ், 1975
  • 198 v பாகிஸ்தான், டிரெண்ட் பிரிட்ஜ், 1992
  • 196 v கிழக்கு ஆப்பிரிக்கா, எட்பாஸ்டன், 1975

ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் ஆஸ்திரேலியா பெற்ற மிகப்பெரிய தோல்விகள்:

  • 242 v இங்கிலாந்து, டிரெண்ட் பிரிட்ஜ், 2018*
  • 206 v நியூஸிலாந்து, அடிலெய்ட், 1986
  • 196 v தென் ஆப்பிரிக்கா, கேப் டௌன், 2006
  • 164 v மே.இ.தீவுகள், பெர்த், 1987
  • 159 v நியூஸிலாந்து, ஆக்லாந்து, 2016

ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விகள்:

  • 272 ஜிம்பாப்வே v தென் ஆப்பிரிக்கா, பிணாமி, 2010
  • 258 இலங்கை v தென் ஆப்பிரிக்கா, பார்ல், 2012
  • 257 மே.இ.தீவுகள் v தென் ஆப்பிரிக்கா, சிட்னி, 2015
  • 245 இந்தியா v இலங்கை, ஷார்ஜா, 2000
  • 242 ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, டிரெண்ட் பிரிட்ஜ், 2018*

ஒருநாள் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்:

  • 481-6 இங்கிலாந்து v ஆஸ்திரேலியா
  • 444-3 இங்கிலாந்து v பாகிஸ்தான்
  • 443-9 இலங்கை v நெதர்லாந்து
  • 439-2 தென் ஆப்பிரிக்கா v மே.இ.தீவுகள்
  • 438-9 தென் ஆப்பிரிக்கா v ஆஸ்திரேலியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.