ஐபிஎல் பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் ஆர்சிபியின் தொடக்க வீரர் விராட் கோலி சொதப்பி வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இதுவரை 17 பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ள விராட் கோலியின் சராசரி 26.4ஆக இருக்கிறது. இதில் ஒரு முறை டக் அவுட்டாகியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி (37 வயது) அவரது தலைமையில் ஒரு ஐபிஎல் கோப்பயைக் கூட வென்றதில்லை. ரஜத் படிதார் தலைமையில் கடந்த சீசனில் முதல்முறையாக ஆர்சிபி கோப்பை வென்றது.
லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் விராட் கோலி இதுவரை மொத்தமாக 281 ஐபிஎல் போட்டிகளில் 9,218 ரன்கள் குவித்துள்ளார். இதில் 67 அரைசதங்கள் அடங்கும். சராசரி 40.07ஆக இருக்கிறது.
லீக் போட்டிகளில் அசத்தும் விராட் கோலி பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் சொதப்பி வருகிறார். 17 பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் 396 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ள விராட் கோலியின் சராசரி 26.4ஆக இருக்கிறது.
இந்த முறையாவது இந்த மோசமான சறுக்கலுக்க்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இன்றிரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் குவாலிஃபயர் 1ல் ஆர்சிபியும் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.
Summary
17 Matches, 396 Runs, 2 Fifties And A Duck: Virat Kohli's Record In IPL Playoffs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











