திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐபிஎல் பிளே - ஆஃப்ஸ் வரலாற்றில் ஷுப்மன் கில் நிகழ்த்திய சாதனை!

ஐபிஎல் பிளே - ஆஃப்ஸ் வரலாற்றில் ஷுப்மன் கில் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

ஷுப்மன் கில். - படம்: எக்ஸ் / ஐபிஎல்

Updated On :30 மே 2026, 12:16 pm IST

ஐபிஎல் பிளே - ஆஃப்ஸ் வரலாற்றில் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

நேற்றிரவு நடந்த குவாலிஃபயர் 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 214/6 ரன்கள் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவர்களில் 219/3 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுபம்ன் கில் 53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 15 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றும் அசத்தினார்.

பிளே ஆப்ஸ் வரலாற்றிலேயே சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாதான் அதிக ரன்கள் (714) குவித்து முதலிடத்தில் இருக்கிறார். தற்போது, ஷுப்மன் கில் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக 2023 குவாலிஃபயர் 2 போட்டியிலும் ஷுபம்ன் கில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள குஜராத் அணி ஆர்சிபியுடன் ஞாயிற்றுக்கிழமை (மே.31) மோதவிருக்கிறது.

Summary

SHUBMAN GILL - Second Most runs in IPL Playoff history

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.