டி20 போட்டிகளில் ஆர்சிபி பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் சொதப்பியிருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்றிரவு 7.30 மணிக்கு இறுதிப் போட்டியில் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் மோதுகிறார்கள்.
இந்தப் போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை பவர்பிளேவிலேயே ஆர்சிபி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குஜராத் அணியின் பலமே தொடக்க வீரர்கள்தான். ஆனால், ஆர்சிபி அணியில் பலமும் பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்துவதான். அதனால், கில் - புவனேஷ்வர் குமார் ஒப்பீடு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
இதுவரை புவனேஷ்வர் குமார் வீசிய 79 பந்துகளில் ஷுப்மன் கில் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் சராசரி 13.3 ஆக இருக்க, மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 101.26ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் புவனேஷ்வர் குமார் ஓவரையும் ஹேசில்வுட் ஓவரையும் எப்படி விளையாடுவார் என்பதைப் பொறுத்தே கோப்பையை வெல்லபோகுவது யார் என்பது தீர்மானிக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.
Summary
Shubman Gill Struggles Against Bhuvneshwar Kumar! Shocking Statistics!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!

ஐபிஎல் பிளே - ஆஃப்ஸ் வரலாற்றில் ஷுப்மன் கில் நிகழ்த்திய சாதனை!







