ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா, “ஆர்சிபி எப்போதும் எனது டிஎன்ஏவின் ஒரு பகுதியாகவே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
ஆர்சிபி அணியை ரூ.166.6 பில்லியன் (ரூ.16,660 கோடி) இந்தியாவின் ஆதித்யா பிர்லா, டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான போல்ட் வென்சுரீஸ், பிளாக்ஸ்டோன் நிறுவனங்கள் வாங்கியுள்ளன.
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை ரஜத் படிதார் தலைமையில் வென்றது. 2008 முதல் இந்த அணியின் உரிமையாளராக தொழிலதிபர் விஜய் மல்லையா இருந்து வந்தார்.
ஆர்சிபி அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மார்ச் 28ஆம் தேதி மோதுகிறது. புதிய நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்கிய நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் மல்லையா பதிவில் கூறியிருப்பதாவது:
ஆர்சிபியின் புதிய உரிமையாளர்களுக்கு இதயப்பூர்வமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியை வாங்கியவருக்கு நல்லது நடக்க வாழ்த்துகள்.
ஆர்சிபி அணியை 2008ல் ரூ.450 கோடிக்கு வாங்கியபோது பலரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். தவறான முதலீடு என்றும் விமர்சித்தார்கள். ராயல் சேலஞ் என்ற வணிக உரிமைப் பெயர் மீதிருந்த காதலால் ஆர்சிபி எனப் பெயரிட்டேன். ரூ.450 கோடி முதலீடு தற்போது ரூ.16,500 கோடியாக வளர்ந்திருப்பது மிகவும் மன நிறைவு தருகிறது.
துடைத்தழிக்க இயலாத நினைவுகளுடன் ஆர்சிபி எப்போதுமே எனது டிஎன்ஏவின் ஒரு அங்கமாக இருக்கும். உலகத்தின் சிறந்த வீராரக இருக்கும் இளம் வீரர் விராட் கோலியைத் தெர்வு செய்ததும் மற்றக்க முடியாது. எனது உரிமையில் இருக்கும்போது அணிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து எப்போதும் பெங்களூரின் சிங்கமான ஆர்சிபிக்கு ஆதரவாக இருங்கள் என்றார்.
Summary
RCB will always remain a part of my DNA...: Vijay Mallya reacts on IPL franchise's blockbuster sale.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி பந்துவீச்சு: பச்சை நிற ஜெர்ஸியுடன் களமிறங்கும் ஆர்சிபி!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

போட்டிக்குப் பிறகு... வைபவ் சூர்யவன்ஷியின் கழுத்தை நெரித்த ஆர்சிபி கேப்டன்!
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



