ஆர்சிபி அணி இன்ஸ்டாகிராமில் முதல் ஐபிஎல் அணியாக 25 மில்லியன் (2.5 கோடி) பின்தொடர்வோர்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. எம்.எஸ். தோனி, ரோஹித் சர்மா வரிசையில் தொடர்ச்சியாக கோப்பை வென்றவராக ரஜத் படிதாரும் இணைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் 2008 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் ஆர்சிபி அணி 2 முறை கோப்பை வென்றுள்ளன. சிஎஸ்கே, மும்பை அணி தலா 5 கோப்பைகளை வென்றுள்ளன.
தொழிலதிபர் விஜய் மல்லையா தொடங்கிய இந்த ஆர்சிபி அணியை 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆதித்யா பிர்லா குரூப், டைம்ஸ் ஆஃப் இந்தியா, போல்ட் வென்சுரிஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் வாங்கின.
ஆர்சிபி அணியில் விராட் கோலி, ரஜத் படிதார் என்ற வீரர்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கடந்த சீசனில் இருந்து இதில் விளையாடும் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
ஆர்சிபியின் ஆடவர், மகளிர் அணிக்கும் ஒரே இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால் மற்ற அணிகளை விடவும் இதற்கு அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் ஆர்சிபி முதல் ஐபிஎல் அணியாக 25 மில்லியன் (2.5 கோடி) பின்தொடர்வோர்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
Summary
Rcb becomes the first IPL team to complete 25 million followers on Instagram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










