இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் 2026-27ல் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையை கவனத்தில் கொண்டு இந்தப் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு அணிகள் இந்தியாவுடன் பல்வேறு வடிவ விளையாட்டில் மோதுகின்றன.
இந்தச் சீசனில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவுடன் 22 போட்டிகளில் 17 நகரங்களில் இந்தியா முழுவதும் விளையாட இருக்கின்றன.
செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகள் உடன் இந்தப் போட்டிகள் தொடங்குகின்றன. 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் நடக்கின்றன.
டிசம்பரில் இலங்கையுடன் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் விளையாடுகின்றன. அடுத்தாண்டு தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.
பார்டர் - கவாஸ்கர் டிராபியில் 5 போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் ஜனவரி 21ஆம் தேதி தொடங்குகின்றன. நாக்பூர், சென்னை, குவாஹாட்டி, ராஞ்சி, அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கின்றன.
கடந்த முறை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டிராபியில் தோல்வியுற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகாமல் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
Fixtures unveiled for India men's international home season 2026-27
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய டி20 கேப்டனாக ஷ்ரேயாஸ் தேர்வு..! அணியில் இடம்பிடித்த 15 வயதான சூர்யவன்ஷி!

தூதா சீசன் - 2 இணையத் தொடரின் படப்பிடிப்பு தொடக்கம்!

இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்!

17 சராசரியுடன் விளையாடும் சூர்யகுமார் யாதவ்..! இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்படுவாரா?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




