17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூதா சீசன் - 2 இணையத் தொடரின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகும் தூதா சீசன் - 2 இணையத் தொடர் குறித்து...

News image

தூதா சீசன் - 2 தொடரின் பூஜை. - படம்: எக்ஸ் / நார்த்ஸ்டார் என்டர்டெயின்மென்ட்ஸ்.

Updated On :5 ஜூன் 2026, 4:10 pm IST

நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகும் தூதா சீசன் - 2 இணையத் தொடரின் படப்பிடிப்பு தொடங்கியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் விக்ரம் கே. குமார் இயக்கத்தில் 2023ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தூதா இணையத் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தத் தொடரில் நாக சைதன்யாவுடன் பார்வதி திருவோத்து, ஸ்ரீகாந்த் முரளி, பராச்சி தேசாய், அனீஷ் குருவில்லா, தருண் பாஸ்கர், ரோஹிணி, பிரியா பவானி ஷங்கர், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடருக்குக் கிடைத்த நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் எடுக்கப்படவிருக்கிறது.

இந்தப் பூஜையில் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா தொடக்கி வைத்தார். இந்தத் தொடரின் நாகார்ஜுனா, மற்றும் நார்த்ஸ்டார் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக ஷரத் மரார் தயாரிக்கிறார்கள்.

இந்த விழாவில் நாகார்ஜுனா, பார்வதி, பவானி ஷங்கர், நாகசைதன்யா மற்றும் படக்குழுவினர் சிலர் கலந்துகொண்டனர். கடைசியாக நாக சைதன்யா நடித்த தண்டேல் சுமாரான வரவேற்பையே பெற்றது.

Summary

Filming for the web series 'Dhootha' Season 2 has begun!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.