இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சாய்ராஜ் பஹுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான சாய்ராஜ் பஹுதுலேவை பிசிசிஐ இன்று (ஜூன் 2) நியமித்துள்ளது.
53 வயதாகும் சாய்ராஜ் பஹுதுலே இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். லெக் ஸ்பின்னரான அவருக்கு உள்ளூர் போட்டிகளில் அதிகம் விளையாடிய அனுபவம் உள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் அவர் 630 விக்கெட்டுகள் மற்றும் 6176 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்திய சாய்ராஜ் பஹுதுலே, விதர்பா, கேரளம், குஜராத் மற்றும் பெங்கால் ஆகிய அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐசிசி யு19 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, சாய்ராஜ் பஹுதுலே அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் அவர் இடம்பெற்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக அவரது பயணம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former India leg-spinner Sairaj Bahutule was on Tuesday appointed as the spin bowling coach of the men's national team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











