தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிங்க் பந்து ஆட்டத்துக்கு கௌதம் கம்பீர் ஆதரவு!

பிங்க் பந்து ஆட்டத்துக்கு கௌதம் கம்பீர் ஆதரவளித்தது பற்றி...

News image

கௌதம் கம்பீர் - படம் | கௌதம் கம்பீர் (எக்ஸ்)

Updated On :5 ஜூன் 2026, 4:27 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமான வெளிச்சம் காரணமாக, ஆட்டத்தை சிவப்பு பந்திலிருந்து பிங்க் பந்துக்கு மாற்றும் ஐசிசி-யின் யோசனைக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 6 முதல் 10 வரை பஞ்சாப் மாநிலம் முல்லாபூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுத் திடைலில் நடைபெர உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் மோசமான வெளிச்சம் காரணமாக சிவப்பு பந்துக்கு பதில் பிங்க் பந்துக்கு மாறும் யோசனையில் ஐசிசி உள்ளது.

இது குறித்து கௌதம் கம்பீர் பேசியதாவது:

எனக்கு இது மிகவும் பிடிக்கும். ஏனென்றால், வெற்றிக்கான வாய்ப்பு நம்மிடம் இருந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முந்தைய கடைசி டெஸ்ட் போட்டியில் நீங்கள் விளையாடுவதாகவும், தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அந்தப் போட்டியில் உங்களுக்கு இருப்பதாகவும் கற்பனை செய்து பாருங்கள். வெளிச்சம் மோசமாக இருந்தால் அது நடைபெறாது. ஆகவே பிங்க் பந்து மாற்றத்தை நான் ஆதரிக்கிறேன்.

இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ள நேரத்தில் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். வீரர்களுக்கு இது சற்று கடினமாகவும் நியாயமற்றதாகவும் இருக்கும் என்று எனக்குத் தெரியும். டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியில் விளையாடுவதாக எண்ணிப் பாருங்கள்.

மோசமான வெளிச்சம் காரணமாக ஐந்து நாள்கள் உங்களால் முழுமையாக விளையாட முடியவில்லை என்றால் அது நியாயமற்றதாக இருக்கும். எனவே, இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இது நேர்மறையான செயல்பாடு. இரு அணிகளும் இதனை நேர்மறையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் கௌதம் கம்பீர்.

Summary

Indian team head coach Gautam Gambhir on Friday supported the ICC's proposal to switch from the red ball to the pink ball during the Test match against Afghanistan due to poor light.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.