ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியா வந்துள்ள வியத்நாம் அதிபருடன் அதானி சந்திப்பு!

இந்தியா வந்துள்ள வியத்நாம் அதிபர் தோ லாமை தொழிலதிபர் கௌதம் அதானி சந்தித்துள்ளது குறித்து...

Adani meets Vietnam President

கௌதம் அதானி - கோப்புப் படம்

Published On :7 மே 2026, 7:15 pm IST

இந்தியா வந்துள்ள வியத்நாம் அதிபர் தோ லாமை, தொழிலதிபரும், நாட்டின் மிகப் பெரிய பணக்காரருமான கௌதம் அதானி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

வியத்நாம் அதிபர் லாம் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்த அவர் பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (மே 7) இந்தியா - வியத்நாம் வணிக மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் முக்கிய தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தப் பிறகு பிரபல தொழிலதிபர் அதானி வியத்நாம் அதிபர் லாமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, வியத்நாமில் கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் சுமார் ரூ.95 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, கடந்த 2025 ஆம் ஆண்டு அதானி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Adani met in person and held discussions with Vietnamese President To Lam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.