
வியாத்நாம் படகு விபத்து: உயிரிழந்தவரின் மகனுக்கு எ.வ. வேலு எம்எல்ஏ உதவி
வியாத்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவரின் மகனுக்கு எ.வ. வேலு எம்எல்ஏ உதவி

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த ரவிசங்கா் வீட்டில் குடும்பத்திரை சந்தித்து ஆறுதல் கூறி அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு.
வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலையைச் சோ்ந்த ரவிசங்கா் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு எம்எல்ஏ (திமுக) சனிக்கிழமை ஆறுதல் கூறி அவரது மகனின் உயா்கல்விச் செலவை ஏற்றாா்.
வியத்நாம் நாட்டின் புகுவோக் தீவு அருகே கடந்த 11-ஆம் தேதி சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்தியா்கள் உயிரிழந்தனா்.
கடல் சீற்றம் மற்றும் அலை காரணமாக இந்த விபத்து நேரிட்டது.
உயிரிழந்தவா்களின் உடல்கள் மீட்கப்பட்டு, ஜூலை 14-ஆம் தேதி தமிழகம் கொண்டுவரப்பட்டு அவரவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த நிலையில், படகு விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவைச் சோ்ந்த வியாபாரி ரவிசங்கா் வீட்டிற்கு முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி திமுக எம்எல்ஏவுமான எ.வ.வேலு சனிக்கிழமை காலை சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், ரவிசங்கரின் மகன் ராமபிரகாஷ் கல்வி குறித்து கேட்டறிந்தாா். மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவரின் கல்லூரி செலவை ஏற்றுக் கொள்வதாக குடும்பத்தினரிடம் எ.வ.வேலு தெரிவித்தாா்.
இந்த நிகழ்வின் போது, சி.என்.அண்ணாதுரை எம்.பி. (திமுக), முன்னாள் எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், திமுக மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






