ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் இந்தியா கொண்டு வரப்படுவது பற்றி....

Bodies of 15 Indian tourists killed in Vietnam boat accident to be sent home soon

வியத்நாம் படகு விபத்து.

Published On :12 ஜூலை 2026, 3:23 pm IST

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் விரைவில் தாயகம் கொண்டு வரப்படும் என்று இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியத்நாமில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், நேற்று நடந்த படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் ஹோ சி மின் நகருக்கு இன்று மாலைக்குள் கொண்டு செல்லப்படும். பின்னர் முறைப்படியான நடைமுறைகள் மற்றும் ஆவணப் பணிகள் முடிந்தவுடன் உடல்கள் மிக விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை எவ்வளவு விரைவாக இந்தியாவுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அனுப்ப அனைத்து உதவிகளையும் செய்வதாக வியத்நாம் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும், அவர்களுடன் தங்களது குழுவினர் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வியத்நாமின் ஹான் மே ரட்டிலிருந்து 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 ஊழியா்களுடன் ஆன் தோய் துறைமுகம் நோக்கி கடலில் சனிக்கிழமை சென்ற விசைப் படகு, ஹான் மே ரட்டிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவில் கடல் சீற்றம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தத் தகவல் அறிந்ததும், கரையிலிருந்து பிற சுற்றுலாப் படகுகள், கடலோரக் காவல் படை, கடற்படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், விபத்துக்குள்ளான படகின் 4 ஊழியா்கள் உள்பட 21 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். அவர்களில் 10 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.

மீட்கப்பட்டவா்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிக அளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் அந்த நிறுவனம் சாா்பில் வியத்நாம் நாட்டுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

அவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் கடலில் படகில் சென்றபோதுதான் விபத்தில் சிக்கிக் கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The bodies of the 15 Indian tourists who were killed in a boat accident off Vietnam's Phu Quoc Island have been sent to Ho Chi Minh City from where they will be transported to India, the Indian mission said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.