தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்! இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு!

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதைப் பற்றி...

News image

விராட் கோலி.

Updated On :4 ஜூன் 2026, 10:42 am IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐயில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெறவிருக்கிறது.

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 156 ரன்களைத் துரத்திப் பிடித்து, ஆர்சிபி அணி தனது இரண்டாவது கோப்பையை வெல்ல விராட் கோலி முக்கியப் பங்காற்றினார். ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றிருந்தார்.

நீண்ட நாள்களுக்குப் பின்னர், மீண்டும் இந்திய ஜெர்ஸியில் விராட் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில், அவர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐயின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உள்பட 240 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

விராட் கோலியின் மாற்று வீரரை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அவர், ஜூலை 14 முதல் ஜூலை 19 வரை இங்கிலாந்தில் நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

India suffered a big blow ahead of the Afghanistan ODIs as star batter Virat Kohli has been ruled out of the series due to a hamstring injury. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.