திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டி20 போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

News image

விராட் கோலி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :17 மே 2026, 6:42 pm IST

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி அரைசதம் விளாசி அசத்தினர். வெங்கடேஷ் ஐயர் 73* ரன்களும், விராட் கோலி 58 ரன்களும் எடுத்தனர்.

இன்றையப் போட்டியில் விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை 41 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிக முறை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

டி20 போட்டி வரலாற்றில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 210 முறை 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளார். அவரின் இந்த சாதனையை தற்போது விராட் கோலி சமன் செய்துள்ளார். அந்த வரிசையில் டேவிட் வார்னர் (200 முறை), பாபர் அசாம் (196 முறை), கிறிஸ் கெயில் (191 முறை) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விராட் கோலி 138 முறை 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையடியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை 50+ பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா (107 முறை) உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Virat Kohli has equaled the record of former England player Alex Hales in T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.