தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உங்களது அதிரடி ஆட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள்; சூர்யவன்ஷிக்கு பயிற்சியாளர் புகழாரம்!

வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டாம் என விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

News image

வைபவ் சூர்யவன்ஷி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :3 ஜூன் 2026, 7:57 pm IST

வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டாம் என விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. இந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், விருதுகள் பலவற்றையும் வென்றார் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அதிரடியாக விளையாடிய அவர் 16 போட்டிகளில் 776 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இந்த நிலையில், டி20 வடிவிலான கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் கிடைப்பது மிகவும் அரிது, அவர் அவரது அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என விராட் கோலியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி மிகவும் திறமையான வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஐபிஎல் தொடரில் அவர் விளையாடி விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. முதல் தர, சர்வதேச மற்றும் உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

வைபவ் சூர்யவன்ஷி மிகவும் சிறப்பான திறமை வாய்ந்த வீரர். அவர் நம்பமுடியாத விதத்தில் சிக்ஸர்களை விளாசுகிறார். டி20 வடிவிலான போட்டிகளில் அவரது பேட்டிங் அணுகுமுறையில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல், அதிரடியான ஆட்டத்தையே தொடர வேண்டும் என்றார்.

Summary

Virat Kohli's coach, Rajkumar Sharma, has stated that Vaibhav Suryavanshi should not make any changes to his aggressive style of play.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.