திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

60 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு அணியில் இடமில்லையா? ஆகிப் நபிக்கு பயிற்சியாளர் ஆதரவு!

ரஞ்சி கோப்பையில் 60 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜம்மு - காஷ்மீர் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபிக்கு ஆதவராக இஷாந்த் சர்மாவின் பயிற்சியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆகிப் நபி. - படம்: முகநூல் / ஆகிப் நபி

Updated On :3 ஜூன் 2026, 5:16 pm IST

ரஞ்சி கோப்பையில் 60 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜம்மு - காஷ்மீர் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபிக்கு ஆதவராக இஷாந்த் சர்மாவின் பயிற்சியாளர் ஷ்ரவன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி நியூ சண்டீகரில் தொடங்குகிறது.

இந்த நிலையில், ரஞ்சி கோப்பையில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியை அணியில் சேர்க்காமல், மாற்று வீரருக்கான தெரிவில் வைத்துள்ளது குறித்து இஷாந்த் சர்மாவின் பயிற்சியாளர் ஷ்ரவன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 60 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகிப் நபியை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணியில் ஒரு வீரராக சேர்க்காமல் மாற்று வீரருக்கான தெரிவாகவும், நெட் பந்துவீச்சாளராகவும் வைத்துள்ளது ஏன்? மாற்று வீரர் என்ற பெயரில் அவரை நெட் பந்துவீச்சாளராக சேர்த்துள்ளீர்கள். அவர் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரை நெட் பந்துவீச்சாளராக கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. இதனைப் பார்ப்பதற்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது.

ஆகிப் நபி போன்ற பந்துவீச்சாளர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காதது ஏன்? ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடும்போது அவர் ஏன் மாற்று வீரராக சேர்க்கப்பட வேண்டும். ரஞ்சி கோப்பைத் தொடரில் 60 விக்கெட்டுகளை ஆகிப் நபி கைப்பற்றியுள்ளார். அவரை அணியில் சேர்க்காமல் மற்ற வீரர்களை அணியில் சேர்ப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும். ஆகிப் நபி வாய்ப்புக்காக கெஞ்சவில்லை. அபார பந்துவீச்சின் மூலம் அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார். 60 விக்கெட்டுகள் கைப்பற்றுவது என்பது நகைச்சுவை கிடையாது என்றார்.

Summary

Ishant Sharma's coach has raised questions in support of Jammu and Kashmir fast bowler Auqib Nabi, who took 60 wickets in the Ranji Trophy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.