ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சேப்பாக் சூப்பர் கில்லிஸுக்கு 127 ரன்கள் இலக்கு; முதல் வெற்றி கிடைக்குமா?

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது.

Chepauk Super Gillies players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் வீரர்கள் - படம் | டிஎன்பிஎல்

Published On :9 ஆகஸ்ட் 2026, 5:53 pm IST

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் கேப்டன் என்.ஜெகதீசன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் பாபா இந்திரஜித் மற்றும் விமல் குமார் தலா 21 ரன்கள் மற்றும் மோஹித் மிட்டன் 20 ரன்கள் எடுத்தனர். நிரங்கர் சர்மா 15 ரன்கள் எடுத்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் தரப்பில் அபிஷேக் தன்வர் மற்றும் அஷ்வந்த் வல்தாபா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். எம். சிலம்பரசன், விக்னேஷ் மற்றும் பிரேம் குமார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி களமிறங்குகிறது. நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

Summary

Batting first in the TNPL cricket match against the Chepauk Super Gillies, the Dindigul Dragons scored 126 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.