ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிரடியில் மிரட்டிய ஆஷிக்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 205 ரன்கள் எடுத்துள்ளது.

Ashiq expressed his joy after smashing a half-century.

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆஷிக் - படம் | டிஎன்பிஎல் (எக்ஸ்)

Published On :7 ஆகஸ்ட் 2026, 5:31 pm IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 205 ரன்கள் எடுத்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் முதலில் விளையாடியது.

அதிரடியில் மிரட்டிய ஆஷிக்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கே.ஆஷிக் 56 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து 2 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார். அவரைத் தொடர்ந்து, அஸ்வந்த் வல்தாபா 28* ரன்கள், கேப்டன் என்.ஜெகதீசன் 27 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

திருப்பூர் அணி சார்பில் ஆர்.சிலம்பரசன் மற்றும் எஸ்.மோகன் பிரசாத் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நடராஜன், சாய் கிஷோர் மற்றும் இசக்கி முத்து தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the Tamil Nadu Premier League match against the iDream Tiruppur Tamizhans, the Chepauk Super Gillies scored 205 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.