ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பந்துவீச, நெல்லை ராயல் கிங்ஸ் பேட்டிங்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 10ஆவது சீசனின் மூன்றாவது போட்டி குறித்து...

டாஸின் போது சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன்கள். - படங்கள்: எக்ஸ் / டிஎன்பிஎல்

Published On :5 ஆகஸ்ட் 2026, 8:10 pm IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 10ஆவது சீசனின் மூன்றாவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டிகளை டிஎன்பிஎல் யூடியூப் தளத்தில் இலவசமாக நேரலையில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் திருப்பூர் அணியை திண்டுக்கல் அணி வென்றது, இரண்டாவது போட்டியில் திருச்சியை மதுரை அணி வென்றது. தற்போது, மூன்றாவது போட்டியாக சென்னை - நெல்லை அணிகள் மோதுகின்றன.

அதிகமுறை கோப்பை வென்ற அணியான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீசி வருகிறது.

பவர்பிளே முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பில் 62 ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் தொடக்க வீரர் அதிஷ் 39* ரன்களுடன் அதிரடியாக விளையாடி வருகிறார்.

மற்றுமொரு தொடக்க வீரர் சந்தோஷ் குமார் துரைசாமி 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அபிஷேக் தன்வார் அந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

Summary

TNPL: Chepauk Super Gillies elected to bowl against Nellai Royal Kings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.