ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டிஎன்பிஎல்: குர்ஜப்னீத் சிங் அதிரடியால் மதுரை த்ரில் வெற்றி!

சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் அதிரடியால் த்ரில் வெற்றி கண்ட மதுரை பேந்தர்ஸ் அணி குறித்து...

Gurjapneet Singh, Saravanan

குர்ஜப்னீத் சிங், சரவணன். - படம்: டிஎன்பிஎல்

Published On :5 ஆகஸ்ட் 2026, 7:46 pm IST

சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் அதிரடியால் மதுரை பேந்தர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) இரண்டாவது போட்டியில்  டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி சோழா அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது.

திருச்சி அணியில் தொடக்க வீரர் சுரேஷ் குமார் 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் ரவி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சஞ்சய் யாதவ் 37 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து விளையாடிய மதுரை பேந்தர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 14.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதற்குமேல் வெற்றிபெறாதென நினைத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி மதுரையின் கடைநிலை பேட்டர்கள் வைத்தியம் அளித்தார்கள்.

கடைசி 3 ஓவர்களுக்கு 42 ரன்கள் தேவைப்படும் நிலையில், களமிறங்கிய சிஎஸ்கே அணியில் பந்துவீச்சாளராக அசத்திய குர்ஜப்னீத் சிங் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மற்றுமொரு வீரர் பி. சரவணன் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். மிகவும் த்ரில் வெற்றியுடன் மதுரை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

Summary

TNPL: Madurai clinches thrilling win thanks to Gurjapneet Singh's explosive performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.