ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆர்பிஐ வேலைக்குத் திரும்பிய இஷான் கிஷன்..! வைரலாகும் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் ஆர்பிஐ வேலைக்குத் திரும்பியது குறித்து...

Ishan kishan

இஷான் கிஷன். - படங்கள்: எக்ஸ் / பிரேம் சிங் மீனா.

Published On :5 ஆகஸ்ட் 2026, 6:40 pm IST

இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் போட்டிகள் இல்லாத சமயத்தில் தனது ஆர்பிஐ வேலைக்குத் திரும்பியது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

இஷான் கிஷன் (28 வயது) பிகாரைச் சேர்ந்தவர். இந்திய டி20 அணியில் இருக்கிறார். ஒருநாள் அணியிலும் விளையாடும் டெஸ்ட் அணியில் இல்லாததால் அவருக்கு ஓய்வு நேரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இலங்கைக்குச் சென்று டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இஷான் கிஷன் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இல்லாத நேரங்களில் தனது ஆர்பிஐ அசிஸ்டன்ட் மேனேஜர் வேலையில் பங்கேற்பார்.

அவரது சொந்த ஊரான பாட்னாவில் இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியில் சக ஊழியர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விளையாட்டுக்கு ஒதுக்கப்படும் இட ஒதுக்கீட்டில் இந்த வேலையைப் பெற்றிருக்கும் அவர் அந்த நிறுவனத்துக்காக உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

துலீப் கோப்பையில் மேற்கு அணிக்கு கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தொடங்கவிருக்கும் இந்தப் போட்டிகளுக்கு முன்பாக தனது அரசு வேலையை கவனிக்கும் அவரது மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Summary

Ishan Kishan Resumes RBI Duties During Break From Cricket

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.