ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிரடியில் மிரட்டிய பாபா இந்திரஜித்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 240 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது.

Baba Indrajith

பாபா இந்திரஜித் - படம் | டிஎன்பிஎல் (எக்ஸ்)

Published On :14 ஆகஸ்ட் 2026, 7:17 pm IST

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பேட் செய்தது. ஆட்டம் மழை காரணமாக 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.

அதிரடியில் மிரட்டிய பாபா இந்திரஜித்!

முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிவம் சிங் 15 பந்துகளில் 38 ரன்களும் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), விகே வினீத் 20 பந்துகளில் 45 ரன்களும் (7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தைத் தந்தனர்.

அதன் பின், விமல் குமார் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்த கேப்டன் பாபா இந்திரஜித் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 25 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் தரப்பில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட்டுகளையும், கார்த்திக் மணிகண்டன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.

Summary

In the TNPL cricket tournament match against Salem Spartans, the Dindigul Dragons, batting first, scored 239 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.