ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை: ககிசோ ரபாடா

சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

Kagiso rabada

ககிசோ ரபாடா - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:07 pm IST

சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. விரைவில் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரவுள்ள நிலையில், அணிகள் பலவும் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடர் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளது என்பதால் எங்களுக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. சொந்த மண்ணில் விளையாடுவதை அழுத்தம் என்பதை விட சுதந்திரமாக விளையாடவுள்ளோம் என்றே கூற வேண்டும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Summary

South African player Kagiso Rabada has stated that there is no pressure whatsoever in playing the World Cup tournament on home soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.