ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பதே எனது இலக்கு: டேவிட் மில்லர்

தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பதே தனது இலக்கு என டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

David Miller

டேவிட் மில்லர் - படம் | ஐசிசி

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:18 pm IST

தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பதே தனது இலக்கு என டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராகும் விதமாக அணிகள் பலவும் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பதே தனது இலக்கு என டேவிட் மில்லர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அணிக்காக உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. என்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை கோப்பையுடன் நிறைவு செய்ய விரும்புகிறேன்.

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான அணியில் இடம்பெறுவதை நான் விரும்புகிறேன். அணிக்காக என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்கி கோப்பையை வெல்ல உதவுவேன். இந்த உலகக் கோப்பை மிகவும் சிறப்பானது. ஏனெனில், எங்களது சொந்த மண்ணில் விளையாடவுள்ளோம் என்றார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் டேவிட் மில்லர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Summary

David Miller has stated that his goal is to win the World Cup for the South African team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.