ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் புதிய சாதனை!

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Azmatullah Omarzai

அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (கோப்புப் படம்) - படம் | ஐசிசி

Published On :8 ஆகஸ்ட் 2026, 9:32 pm IST

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. மழை காரணமாக 47 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 33 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை நிறைவு செய்துள்ளார்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படமால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Afghanistan all-rounder Azmatullah Omarzai has achieved the milestone of 2,000 runs and 100 wickets in international cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.