உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; வங்கதேசத்துக்கு 228 ரன்கள் இலக்கு!
உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது.


உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இருவர் அரைசதம்; 228 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ப்ரூக் ஹால்லிடே 69 ரன்களும், கேப்டன் சோஃபி டிவைன் 63 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, சூஸி பேட்ஸ் 29 ரன்களும், மேடி கிரீன் 25 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ரபேயா கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மரூஃபா அக்தர், நஹிதா அக்தர், நிஷிதா அக்தர் மற்றும் ஃபஹிமா கட்டூன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக் கூடாது: மோஷின் நக்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...