டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

யு19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
- படம் | பிசிசிஐ
Updated On :24 ஜனவரி 2026, 1:28 pm

இணையதளச் செய்திப் பிரிவு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது. மழை காரணமாக போட்டி 37 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக கல்லம் சாம்சன் 37 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, செல்வின் சஞ்சய் 28 ரன்களும், ஜேக்கோப் காட்டர் 23 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஆர்.எஸ்.அம்பிரிஷ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹெனில் படேல் 3 விக்கெட்டுகளையும், கிலான் படேல், முகமது எனான் மற்றும் கனிஷ்க் சௌகான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

summary

In the Under-19 World Cup tournament, New Zealand, batting first against India, were all out for 135 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.